2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வல்லப்பட்டைச் சக்கையுடன் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 23 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

எண்பது இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவிருந்த  வல்லப்பட்டையின் மரப்பட்டைச் சாற்றிலிருந்து எடுக்கப்பட்ட 980 கிராம் சக்கையுடன்  சந்தேக நபர்கள் நால்வரை கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலேகம, சொய்சாவத்தை  பகுதியில் சனிக்கிழமை (22)  கைதுசெய்ததாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, மேற்படி  சக்கை அடங்கிய பொதியையும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் கொஸ்வத்தை  பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து,  பொலிஸ் கான்ஸ்டபிளும் பொலிஸ் பாதுகாப்பு உதவியாளரும் கொள்வனவாளர்கள்  போன்று வேடமிட்டுச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

நாத்தாண்டி, தங்கொட்டுவ, லுணுவில, உடுகம்பொல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களையே கைதுசெய்ததாகவும் இதன்போது பொலிஸார் கூறினர்.

மேற்படி சக்கை மற்றும் முச்சக்கரவண்டியுடன் சந்தேக நபர்கள் நால்வரையும் மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X