2025 மே 19, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் செயலமர்வு இடைநிறுத்தம்

Super User   / 2014 மார்ச் 29 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொலன்னறுவையில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் செயலமர்வு பௌத்த தேரர்களின் வேண்டுகோளின் பேரில் இடை நிறுத்தப்பட்டது.

பொலன்னறுவையிலுள்ள சுது அரலிய ஹோட்டலில் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிங்கள தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று வெள்ளிக்கிழமை (28) நடை பெற்றது.

இந்த செயலமர்வை அரசசார்பற்ற நிறுவனமொன்று ஏற்பாடு செய்திருந்தது. பிராந்திய ஊடகவியலாளர்களுக்கிடையில் ஐக்கியத்தையும் இன ஒற்றுமை கட்டியெழுப்புவதையும் ஊடகவியலாளர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதையும் நோக்காக கொண்டு இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை (28) பிற்பகள் தொடக்கம் சனிக்கிழமை (29) வரை இந்த செயலமர்வு நடை பெறவிருந்த நிலையில் அதன் முதல் அமர்வு மாலை நிறைவு பெற்ற நிலையில் ஹோட்டலுக்கு வருகை தந்த பொலனறுவை பிரதேசத்தைச் சேர்ந்த சில பௌத்த தேரர்கள் இந்த செயலமர்வை இடை நிறுத்துமாறு இதன் ஏற்பாட்டாளர்களை கேட்டுக் கொண்டனர்.

அமெரிக்காவின் நிதியுதவியுடன் இந்த செயலமர்வு நடை பெறுவதால் ஜெனீவாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்பட்டுள்ளது இதனால் செயலமர்வை நடாத்த முடியாது என அங்கு வருகை தந்த பௌத்த தேரர்கள் கூறினர்.

செயலமர்வில் நடந்த விடயங்களையும் இதன் நோக்கத்தையும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தேரோக்களுக்கு எடுத்துக் கூறியதையடுத்து தேரோக்கள் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றனர். எனினும் சனிக்கிழமை நடைபெறவிருந்த இரண்டாம் நாள் அமர்வை இரத்துச் செய்வதென ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர்.

குறிப்பிட்ட செயலமர்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஒரு மாவட்டத்திற்கு தலா 10 ஊடகவியலாளர்கள் வீதம்  சிங்கள தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் என 30 பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X