2025 மே 19, திங்கட்கிழமை

சேவை இல்லத் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் சேவை வழங்கும் நோக்கில், முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொத்தாந்தீவு கிராம அலுவலகர் பிரிவில் அமைக்கப்பட்ட சேவை இல்லத் திறப்பு விழா திங்கட்கிழமை (31) நடைபெற்றது.

இந்த இல்லத்தை புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட பிரதியமைச்சர் பீ.விக்டர் அன்டனி பெரேரா திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டச் செயலாளர் கிங்ஸிலி எம்.பெர்னாண்டோ, முந்தல் பிரதேச செயலாளர் வண்ணிநாயக்கா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இச்சேவை இல்லத்தில் கொத்தாந்தீவு கிராமத்திற்கான கிராம உத்தியோகத்தர் அலுவலகம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகம், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகம் ஆகியன  அமையப் பெற்றுள்ளன.

கிராமத்தில் பணியாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒரே இடத்தில் தங்களது சேவைகளை மக்களுக்கு வழங்கும் வகையில் இச்சேவை இல்லம் அமையப்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X