2025 மே 19, திங்கட்கிழமை

அதிபர் மீது தாக்குதல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளத்திலுள்ள  பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியதாக புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த அவர், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீடு நோக்கி நேற்று வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே வேனில் வந்த ஐந்து பேர் கொண்ட குழு, தன் மீது தாக்குதல் நடாத்தியதுடன் பெற்றோலையும் ஊற்றியுள்ளதாக அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X