2025 மே 10, சனிக்கிழமை

மீன்பிடித்தவர் நீரில் மூழ்கி மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சிறு கடல் வாவியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புத்தளம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அன்சார்  முஹம்மது சிபான்  (வயது 27) என்ற இளம் குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மரணமடைந்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிஸாம் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (21) மாலை  இடம்பெற்ற இச்சம்பவத்தில் மரணமடைந்த இவருக்கு காக்கை வலிப்பு நோயும் இருதய நோயும் உள்ளன.  இதனால், இவர் சிறு கடல் வாவியில் தூரத்துக்கு செல்லாது கரையோரத்தில் நின்றே மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மரண விசாரணையை மேற்கொண்ட புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிஸாம்,  நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணமெனக் கூறினார்.

மேலும், காக்கை வலிப்பு உள்ளவர்கள் கடலுக்கோ அல்லது குளிப்பதற்கோ  தனியே  செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் ஆலோசனை கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X