2025 மே 10, சனிக்கிழமை

புது வருட விளையாட்டுப் போட்டி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

முந்தல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்ட தமிழ்- சிங்கள புது வருட விளையாட்டுப் போட்டிகள்  முந்தல் பிரதேச செயலக சமகிகம விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை(25) இடம்பெற்றது.

முந்தல் பிரதேச செயலாளர் வன்னிநாயக்கா தலைமையில் இடம்பெற்ற இவ்விளையாட்டுப் போட்டிகளில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

காலை 8.30 மணிக்கு மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனைய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. சிறுவர்களுக்கான போட்டிகள்இ கயிறு இழுத்தல்இ கிடுகு இழைத்தல்இ தேங்காய் துருவுதல்இ தலையணை சண்டை உட்ப பல்வேறு போட்டிகள் இங்கு இடம்பெற்றது. பணிஸ் சாப்பிடுதல் எனும் சிறுவர்களுக்கான போட்டி இடம்பெற்றதோடு அப்போட்டி பெரியவர்களுக்காகவும் நடாத்தப்பட்டமை விநோதமான ஒரு போட்டியாக இருந்தது.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X