2025 மே 10, சனிக்கிழமை

டக்ளஸின் பணிகள் சிறப்பானவை –கைத்தொழில் அமைச்சர் தென்னகோன்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதிகள் தொடர்ந்து கொலை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோதும் அம்முயற்சிகளை முறியடித்து எமது மக்களுக்காக அதிஷ்டவசமாக உயிர்தப்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந் நாட்டிலுள்ள அப்பாவிகளான பாரம்பரிய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறாரென மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சர் பிரனீத் பண்டார தென்னகோன் வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்திலுள்ள இரத்தோட்டை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாகலகப்புவித்த கிhமத்தில் பாரம்பரிய அரக்கு கைப்பணி கைத்தொழில் கிராமம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
 

இக் கைத்தொழில் முயற்சியாளர்களில் தொழிற்துறைகளையும் ஜீவனோபாயத்தையும் உயர்த்துவதற்கான பல்வேறு திட்டங்களை அவர் செயற்படுத்தி வருகின்றார். இவ்வாறான உதவிகளை மேற்கொள்வதற்காகத்தானா அவர் இன்றும் எம்முடன் வாழ்ந்து வருகிறார் என என்னத் தோன்றுமளவிற்கு அவரது பணிகள் சிறப்பானவையாக உள்ளன. அவர் எம்மிடையே இருப்பது எமது மக்களின் அதிஸ்டமாகுமென
தென்னகோன் தெரிவித்தார்.

இன்றையதினம் மத்திய மாகாணத்தில் 3.3 மில்லியன் ரூபா செலவில் இக்கிரமத்திலுள்ள 30 கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு வேலைத்தளங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, தேசிய வடிவமைப்புச் சபையின் தலைவர் மார்சல் ஜனதா ஆகியோர் உரை நிகழ்த்தியதுடன், தேசிய அருங்கலைகள் பேரவை தேசிய வடிவமைப்புச் சபை ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள், அமைச்சு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X