2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மாதம்பை கல்முறுவ, பல்லேகல பிரதேசத்திலுள்ள நீரோடையில் இறங்கிய காக்கப்பள்ளி, மானக்குளம்  பிரசேத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (27) இச்சிறுவனும் நண்பரும் மேற்படி நீரோடையில் இறங்கியுள்ளனர். இவர்கள் நீரில் மூழ்குவதை அவதானித்த பெண்ணொருவர் அயலவர்களின் உதவியுடன் இச்சிறுவர்களை  மீட்டு கல்முறுவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.  இருப்பினும், இச்சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாதம்பை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X