2025 மே 10, சனிக்கிழமை

தாக்குதல்; இருவர் காயம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 28 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

புத்தளத்தில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் சாரதி மற்றும் நடத்துனரைத் தாக்கியதாகச் கூறப்படும் இராணுவ வீரர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரையும் திங்கட்கிழமை(28) கைதுசெய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வீரபுர, சாலியவௌ பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் நவரத்ன (சாரதி) மற்றும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எம்.சேமசிங்க (நடத்துனர்) ஆகிய இருவருமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுர வீதி- வீரபுர எனும் பகுதியிலிருந்து சாலியவௌ ஊடாக புத்தளம் நோக்கிப் பயணித்த பஸ் வண்டியில் சாலியவௌ 20 ஆம்; சந்தியில் வைத்து குறித்த இராணுவ வீரர் தனது மனைவியுடன் பஸ்ஸின் முன் வாசலினூடாக ஏற முற்பட்டுள்ளார்.

இதனை தடுத்தபோது  பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் மேற்படி இராணுவ வீரருக்கிடையில் வாய்த்தர்க்கத்தில் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பஸ் புத்தளம் வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட போது, அவ்விடத்திற்கு வந்துள்ள குறித்த இராணுவ வீரரின் சகோதரர் இராணுவ வீரருடன் இணைந்து சாரதி மற்றும் நடத்துனரைத் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து பஸ்ஸிலிருந்த பயணிகள் அவ்விருவரையும் தப்பிச் செல்லவிடாது பிடித்துக் கொண்டதுடன் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவ்விடத்திற்கு வந்த புத்தளம் பொலிஸார் மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X