2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

விபத்தில் 03 இராணுவ வீரர்கள் உட்பட எழுவர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் - அநுராதபுரம் வீதியில் 12ஆம் கட்டை பிரசேத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை வான் ஒன்றும் இராணுவ கப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில்  படுகாயமடைந்த 07  பேர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 03 இராணுவ வீரர்கள்  அடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த  மேற்படி  வானும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ கப் ரக வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


\


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .