2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சிறுமியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய இளைஞன் கைது

Menaka Mookandi   / 2014 மே 02 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குடும்பம் நடத்தியதாகச் சொல்லப்படும் 19 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று சிலாபத்தில் நேற்று வியாழக்கிழமை (01) இடம்பெற்றது.

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் பழைய நீர்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டவராவார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட சிலாபம் பொலிஸார் சந்தேகநபருடன் சிறுமியையும் கைது செய்துள்ளனர்.

தன்னுடன் சந்தேகநபர் காதல் தொடர்பு கொண்டிருந்ததாகவும், இந்நிலையில் தனது காதலனின் அழைப்பை ஏற்று கடந்த 25ஆம் திகதி தனது பெற்றோருக்குத் தெரியாமல் அவருடன் அவரது வீட்டுக்குச் சென்று தங்கியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்றதிலிருந்து தானும் சந்தேகநபரும் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும் அச்சிறுமி பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுமியொருவரை சட்டரீதியான பாதுகாவலர்களிடமிருந்து கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த சிலாபம் பொலிஸார், சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X