2025 மே 10, சனிக்கிழமை

பௌத்த தேரரை தாக்கி கடத்திச்செல்ல முயற்சி

Kanagaraj   / 2014 மே 03 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

மஹவெவ கல்அமுன ஸ்ரீ வர்தனாராம பௌத்த விகாரையின் விகாராதிபதி யடியன ஸ்ரீ சத்தாலோக தேரர் முச்சக்கரவண்டியொன்றில் வந்த சிலரால் தாக்கப்பட்டதாகவும் மாராவில வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (02)  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியொன்றில் வந்த நால்வர் தன்னைக் கடத்திச் செல்ல முற்பட்டதாகவும், தான் எதிர்ப்புக் காட்டியதால் வந்தவர்களில் ஒருவன் தடி போன்ற ஒன்றால் தன்னைத் தாக்கியதாகவும் யடியன ஸ்ரீ சத்தாலோக தேரர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது மற்றொரு தேரரும் விகாரையில் இருந்ததாகவும், அவர் சத்தமிட்டு அயலவர்களை அழைத்ததையடுத்து வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பௌத்த தேரரைக் கடத்திச் செல்ல முற்பட்டமை மற்றும் தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும்; சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X