2025 மே 10, சனிக்கிழமை

பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இருவர் கைது

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

  பெலியத்த பிரதேசத்திலிருந்து வவுனியாவுக்கு கஞ்சா கடத்தி சென்றதாக கூறப்படும் பொலிஸ் சார்ஜனும், முச்சக்கர வண்டி சாரதியும் நவகத்தேகம பொலிஸாரினால் சனிக்கிழமை(03) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, ஈச்சக்குளம் பொலிஸ் சாவடியில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்,தனது மேதின கடமையினை முடித்துவிட்டு பெலியத்தே பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்று மீண்டும் கடமைக்காக வவுனியாவுக்கு முச்சக்கர வண்டியில் செல்லும் போதே நவகத்தேகம பொலிஸாரினால் ஒரு கிலோகிராம் கஞ்சா பொதியுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கஞ்சா பொதி வவுனியா பிரதேசத்தில் விற்பனைக்காக கொண்டு சென்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம்  தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X