2025 மே 10, சனிக்கிழமை

கண்காட்சி கூடம் திறப்பு

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்
, எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாலாவி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி கூடம் திங்கட்கிழமை(05) வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயகசேகரவினால் திறந்து வைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் எம். மொஹிதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர மாணவர்களின் கைப்பணிக்கண்காட்சியினைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியினைப் பூர்த்தி செய்து தருமாறு வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்ற முதலமைச்சர் அந்த கட்டிடத்தின் மேல் மாடியினை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்து தருவதாகத் உறுதியளித்தார்.

புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ். எச்.எம்.நியாஸ், என்.டி.எம்.தாஹிர், சிந்தக்க மாயாதுன்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X