2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் மாவட்ட நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Super User   / 2014 மே 06 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும், ராஜாங்கனை மற்றும் இங்கினிமிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களின் நான்கு வான் கதவுகள் வீதம் திறந்து விடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீர்த்தேக்கங்களுக்கு அருகாமையில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அந்நிலையம் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் உளுவன்குளம் ஊடான புத்தளம் மன்னார் வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் வீதியின் எளுவன்குளத்தை அண்மித்த பகுதி நீரில் முற்றாக மூழ்கியுள்ளது.

இதேவேளை நவகத்தேகம பிரதேசத்தின் சில பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட நவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .