2025 மே 10, சனிக்கிழமை

பாடசாலை பஸ்சில் சூதாட்டம்

Kanagaraj   / 2014 மே 07 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் பாடசாலை சேவை பஸ்ஸினுள் பணத்திற்காகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் ஆறு பேர் சிலாபம் பொலிஸாரால் இன்று புதன்கிழமை (07) பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலைச் சேவைக்கான பஸ்களின் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றினுள் இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பாடசாலை சேவை பஸ்கள் காலையில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு சிலாபம் நகருக்கு வந்து மாணவர்களை பாடசாலைகளில் இறக்கிவிட்டதன் பின்னர் பாடசாலை முடியும் வரை தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த இடைவேளைப் பகுதியிலேயே இதன் ஊழியர்கள் இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பாடசாலைச் சேவை பஸ்கள் மீண்டும் மாணவர்களை வீடுகளுக்கு ஏற்றிச் செல்ல வேண்டியிருப்பதன் காரணமாக கைது செய்யப்பட்ட குறித்த பஸ்களின் ஊழியர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X