2025 மே 10, சனிக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

நவகத்தேகம, மஹஅன்தருவெவ  பிரதேசத்தில் ஒன்றரை கிலோ கஞ்சாவை கொண்டுசென்றதாகக் கூறப்படும் இருவரை சனிக்கிழமை (10) இரவு கைதுசெய்ததாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், மேற்படி  கஞ்சாவுடன் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியொன்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

வர்ணம் தீட்டுனரான 36 வயதுடைய  பிரதான சந்தேக நபர் வலஸ்முல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும்   34 வயதுடைய முச்சக்கரவண்டிச் சாரதி  கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி முச்சக்கரவண்டியில் மொனராகலை பிரதேசத்திலிருந்து கல்கமுவ பிரசேத்தில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பிரதான சந்தேக நபர்  கொண்டுசெல்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து இவர்களை கைதுசெய்ததாகவும்  பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X