2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

புழுதிவயல் கிராமத்தில் அபிவிருத்திப் பணிகள்

Suganthini Ratnam   / 2014 மே 13 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள்ளெழுச்சித் திட்டத்தின் கீழ், முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட புழுதிவயல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட  அபிவிருத்திப் பணிகள்  மக்களிடம் திங்கட்கிழமை (12) கையளிக்கப்பட்டன.

இக்கிராமத்தில் சுமார் 90 இலட்சம் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள்  முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, புழுதிவயல் கிராமத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 02  மாணவர்களுக்கும் சாதாரணதரப் பரீட்சையில் புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்து சிறந்த சித்திகளை  இம்முறை பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

இதேவேளை,  விவசாய நடவடிக்கைகளுக்காக நீரிறைக்கும் இயந்திரங்கள்; பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தளம் நகரபிதாவும் ஆளும் கட்சியின் புத்தளத்தின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ், பிரதி அமைச்சர் விக்டர் என்டனியின் பிரத்தியேகச் செயலாளர், புத்தளம் மாவட்டத்திற்கான மீள்ளெழுச்சித் திட்டப்பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • hilmee Thursday, 15 May 2014 07:28 PM

    ஜி.எஸ் இன் முகத்தை காணவில்லையே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X