2025 மே 09, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் புதிய மீனவ இறங்கு துறை

Super User   / 2014 மே 18 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் நகர மீனவர்களின் நலன் கருதி புத்தளம் கடற்கரையில்  மீனவர் இறங்கு துறை ஒன்று அமைக்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது.

புத்தளம் எட்டாம் வட்டார பிரிவுக்கு உட்பட்ட மிஹ்ராஜ் பள்ளிக்கு அருகாமையில் இந்த புதிய  மீனவர் இறங்கு துறை அமைக்கப்படுகிறது.

புத்தளம் நகர முதல்வரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸின் முயற்சியின் பேரில் இந்த மீனவர் இறங்கு துறை அமைக்கப்படுகிறது.

இதன் ஆரம்பப் பணி நிகழ்வுகளை நகர பிதா பாயிஸ் சனிக்கிழமை (17)  ஆரம்பித்து வைத்தார்.

இந்த மீனவர் இறங்கு துறை அமைக்கப்படுவதன் மூலம் கடலுக்கு தொழிலுக்காக சென்று வரும் மீனவர்கள் தமது வள்ளங்கள், தோணிகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்துச்செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக நகர பிதா பாயிஸ் தெரிவித்தார்.  






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X