2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 21 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஹெரோயின்  வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை இன்று புதன்கிழமை கைதுசெய்ததுடன், இவரிடமிருந்து 20 பைக்கட்டுக்களை கொண்ட  ஹெரோயினை கைப்பற்றியதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தங்களுக்கு கிடைத்த  தகவலைத் தொடர்ந்து,  அது தொடர்பில் சோதனை மேற்கொள்வதற்காக சிலாபம், மைக்குளம் பிரதேசத்திற்கு சிலாபம் பொலிஸ் பிரிவின் குற்ற ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சிலர் சென்றனர்.

மேற்படி பொலிஸாரை கண்ட இவர்கள் தப்பியோடியுள்ளனர். இவர்களை துரத்திச் சென்ற பொலிஸார்,  ஒருவரை கைதுசெய்து சோதனை செய்தபோது அவரது உடம்பில் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

சந்தேக நபர் அதிக போதையில் காணப்பட்டதாக தெரிவித்த பொலிஸார்.  தொழில் எதுவும் இல்லாத இவர்  அவ்வப்போது கொழும்பு சென்று ஹெரோயினை கொண்டுவந்து இரகசியமாக தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துவந்ததாகவும் கூறினர்.

சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X