2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இரு மகள்கள் துஷ்பிரயோகம்: தந்தை கைது

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

தனது மகள்கள் இருவரையும் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தையினை முந்தல் பொலிஸார் வெள்ளிக்கிழமை (23) கைது செய்துள்ளனர்.

மதுரங்குளி, செம்மட்டி பிரதேசத்தினை சேர்ந்த தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் மனைவி வெளிநாட்டுக்கு செல்லும் போது 13 மற்றும் 8 வயதுடைய தனது மகள்கள் இருவரையும் கணவரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இதன் பின்னரே குறித்த சிறுமிகள் இருவரையும் தந்தையான குறித்த சந்தேக நபர் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் சனிக்கிழமை (24) புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .