2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மின்சார் வயர் திருடியவர் கைது:வயர்கள் மீட்பு

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ் 

முந்தல் பிரதேசத்திலுள்ள இறால் பண்ணையிலிருந்த மின்சார வயர்களினை திருடிய சந்தேக நபர்கள் இருவரினை முந்தல் பொலிஸார் வெள்ளிக்கிழமை (23) கைது செய்துள்ளனர்.

முந்தல் பிரதேசத்தினைச் சேர்ந்த இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் ஏற்கனவே சாலியவௌ பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும், போதைப்பொருள் பாவனைக்கும் அடிமையானவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினையடுத்து திருடப்பட்ட 50 மீற்றர் வயர் மீட்கப்பட்டதாகவும், சனிக்கிழமை (24) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X