2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர் செயலமர்வு இடை நிறுத்தம்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இன்டர்நெஷனல் டிரான்ஸ்பெரன்ஸி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொலநறுவை கிரிதலப் பகுதியில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயமர்வினை மின்னேரியா இராணுவ முகாமில் இருந்து வந்தவர்கள் இடைநிறுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி ஊடகவியலாளர்கள் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியே இந்தச் செயலமர்வினை நிறுத்தும் படி அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

வியாழக்கிழமை (22) தொடக்கம் ஆரம்பமான இந்தச் செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை (25) வரையும் இடம்பெற இருந்தது.

எனினும் வியாழக்கிழமை (22) இரவு செயலமர்வு நடந்த விடுதிக்கு வந்த இராணுவத்தினர் குறித்த செயலமர்வினை இடைநிறுத்தும் படி ஏற்பாட்டாளர்களுக்குக் கூறிச் சென்றுள்ளனர்.

எனினும் இந்த செயலமர்வு வெள்ளிக்கிழமை (23) காலை ஆரம்பித்த போது, குறித்த விடுதிக்கு வந்த இராணுவ புலனாய்வாளர்கள் விடுதி முகாமைத்துவத்திடம் குறித்த செயலமர்வினை நடத்த அனுமதிக்க வேண்டாம் எனக்கூறி கட்டளையிட்டுள்ளனர்.

இதனையடுத்து செயலமர்வு நிறுத்தப்பட்டு செயலமர்விற்கு வந்தவர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

மேற்படி செயலமர்வில் வடமாகாணத்தினைச் சேர்ந்த 8 ஊடகவியலாளர்களும் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 7 ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X