2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

லொறியை கடத்தி, பாகங்களை விற்பனை செய்தவர்களுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 மே 26 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

லொறி ஒன்றினைக் கடத்தி, பாகங்களை விற்பனை செய்ததாகச் சொல்லப்படும் ஏழு சந்தேக நபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்ற நீதவான் இன்று (26) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களை. இன்று சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் திகதி சிலாபம் தெதுறு ஓயா பிரதேசத்தில் வைத்து டிப்பர் ரக லொறி ஒன்றினைக் கடத்திச் சென்ற சந்தேக நபர்கள் அதனைப் பாகங்களாக்கி விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில், முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும், பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் கணவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மாதம்பை, சிலாபம், கொழும்பு மற்றும் களனி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவனம் ஒன்றிற்கு செலுத்த வேண்டிய லீசிங் மாதக் கட்டணங்களைச் செலுத்தத் தவறியதால் வாகனத்தைப் பறிமுதல் செய்யும் குழுவினர் எனத் தம்மைக் கூறிக் கொண்டே சந்தேக நபர்கள் லொறியினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X