2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கொஸ்வாடி பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை  லொறியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்குநேர்  மோதியதால்  மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்; மரணமடைந்ததாக  மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான மேற்படி நபர், உடனடியாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அங்கு அவர் மரணமடைந்தார்;.

லொறிச் சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாமெனச்  சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் லொறிச் சாரதியை  மாரவில பொலிஸார் கைதுசெய்ததுடன், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X