2025 மே 09, வெள்ளிக்கிழமை

மாணவிக்கு திருமண விருந்து கொடுத்த இளைஞன் கைது

Kanagaraj   / 2014 மே 27 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

பாடசாலை மாணவியொருவரை திருமணம் செய்து கொள்வதற்காகத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, திருமண விருந்துபசாரத்தை நடத்திய 19 வயது இளைஞன் ஒருவரை திங்கட்கிழமை (26) கைது செய்துள்ளதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியெருவருக்கு திருமணம் நடத்த முயற்சிகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலை அடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

குறித்த சிறுமி பாடசாலை செல்லும் போது  இளைஞருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார். இவ்விடயம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் இக்காதல் தொடர்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் தம்மை திருமணம் செய்ய அனுமதிக்காவிடின் தற்கொலை செய்துகொள்வதாக இவ்விருவரும் தமது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இருவர்களது பெற்றோரும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.  திருமணபதிவு அலுவலகத்துக்கு சென்ற போது மணமகள் சிறுமியாக இருப்பதால் திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது என பதிவாளர் மறுத்துள்ளார்

பின்னர் இரு வீட்டாரும், சிறுமியின் வீட்டுக்கு வந்து திங்கட்கிழமை (26) பகல் திருமண விருந்து வைபவத்தை நடாத்தியுள்ளதுடன், இரவு விருந்தினை இளைஞரின் வீட்டில் நடாத்தியுள்ளனர்.

சிறுமியொருவர் திருமணம் செய்து கொள்வதை கண்ணுற்ற குறித்த விருந்துபசாரத்திற்கு வந்த அப்பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சிறுமியை தம் பொறுப்பில் எடுத்துள்ள பொலிஸார், சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இரு தரப்பு பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X