2025 மே 09, வெள்ளிக்கிழமை

மான், மரை தோல்களுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2014 மே 27 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

மான் மற்றும் மரைகளின் காய்ந்த தோல்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வேட்டைகளுக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுடன் ஒருவரைக் திங்கட்கிழமை (25) கைது செய்துள்ளதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வௌ கோன்வௌ பிரதேசத்தில் வைத்து பொலிஸார் இச்சுற்றிவளைப்பின் பின்னரே குறித்த நபர் (வயது 59) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் வீட்டின் கட்டில் ஒன்றிற்கு கீழே இருந்து காய்ந்த மூன்று மரையின் தோல்கள், மான் தோல்கள், மூன்று உள்நாட்டு துப்பாக்கிகளும் அனுமதிப்பத்திரம் பெறப்பட்ட ஒரு துப்பாக்கி உட்பட 80 ரவைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கைப்பற்றப்பட்ட காய்ந்த மான் மரைகளின் தோல்கள் தனது தந்தையின் காலத்திலிருந்து தன்னிடமுள்ளவை எனவும், கட்டுத்துவக்குகள் காட்டிலிருந்து தன்னால் கழற்றி எடுத்து வரப்பட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் மிருக வளர்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் மிருகங்களுக்கு உணவுகளை எடுப்பதற்காக காட்டுக்குச் சென்ற போது இத்துப்பாக்கிகளை எடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் மிருகத் தோல்கள் மற்றும் தோட்டாக்களுடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X