2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சிறுவன் கைது

Suganthini Ratnam   / 2014 மே 30 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

15 வயதுச் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக்  கூறப்படும் 17 வயதுச் சிறுவனொருவனை நேற்று வியாழக்கிழமை இரவு நவகத்தேகம பொலிஸார்  கைதுசெய்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம பிரதேசத்திற்குட்பட்ட  பகுதியொன்றில் வதியும் சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார். இவரது பெற்றோர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபரும் சிறுமியும் கடந்த 02  வருடங்களாக காதலித்துவந்தனர்.  சிறுமியின் வீட்டிலுள்ளவர்களுக்கு  தெரியாமல் சிறுமியின் வீட்டுக்கு வந்துசென்ற சந்தேக நபரைக் கண்டு  சிறுமியின் வீட்டிலுள்ளவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .