2025 மே 09, வெள்ளிக்கிழமை

கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உப தலைவர் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர்

சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கி அவருடைய கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் கருவலகஸ்வெவ பிரதேச சபையின் உப தலைவரை இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஹலபுளியன்குளம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டதாகச் கூறப்படும் மணல் சிறிய ரக ட்ரக்டரில் ஏற்றிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த வேளை சாலியவெவ பொலிஸார், அந்த சிறிய ரக ட்ரக்டரைக் கைப்பற்றியுள்ளதுடன் அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சிறிய ட்ரக்டரைக் கைப்பற்றிய பொலிஸார் அதனை சாலிய பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற சமயம் அவ்விடத்திற்கு வந்துள்ள குறித்த உப தலைவருடனான குழுவினர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியோது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்த சிறிய ட்ரக்டரையும் அதன் சாரதியையும் மீட்டுக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட சாலியவெவ பொலிஸார் இன்று சனிக்கிழமை அதிகாலை வேளை கருவலகஸ்வௌ பிரதேச சபையின் உப தலைவரைக் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் பொறுப்பிலிருந்து பறித்துச் செல்லப்பட்ட மணல் ஏற்றியிருந்த சிறிய ட்ரக்டரை இதுவரைக் கண்டுபிடிக்கப்பட வில்லை. அத்துடன் உப தலைவருடன் வந்த ஏனையவர்களும் இதுவரைக் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கும் சாலியவெவ பொலிஸார் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் சாலியவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Saturday, 07 June 2014 08:23 AM

    இதை மற்ற சமூகத்தவர் செய்தால் பயங்கரவாதிகள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X