2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 09 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தங்கொட்டுவ நகரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள  விபத்தில் ஆனமடுவ, முதலக்குளி விஜய வித்தியாலய வீதியில் வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு தங்கொட்டுவ நகரில் வசிக்கும் நண்பர் ஒருவரின் திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இவர்  தங்கொட்டுவவுக்கு வந்திருந்தார். இதன்போது, அதிகளவில் மதுபானம் அருந்திய இவர், மதுபோதையில்  பிரதான வீதியில் வீழ்ந்திருந்தபோது வீதியில் பயணித்த லொறியொன்று இவரின் மீது ஏறியதால் இவ்விபத்து சம்பவித்தது.

இவரை உடனடியாக  திருமண வைபவத்தில்  கலந்துகொண்டவர்கள்  தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இவர்
நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு இவர் மாற்றப்பட்டார். இருப்பினும், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  லொறியின் சாரதியைக கைதுசெய்துள்ள தங்கொட்டுவ பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X