2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

முதலுதவி செயலமர்வு

Kanagaraj   / 2014 ஜூன் 17 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்


புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்த முதலுதவி தொடர்பான செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(17) முந்தல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

உதவி பிரதேச செயலாளர் திலங்க சுதீர தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் முந்தல் பிரதேச செயலகத்தின் கிராம அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலுதவித் துறையில் பயிற்றுவிப்பாளரான டெரன்ஸ் ராஜபக்ஷ வளவாளராகக் கலந்து கொண்டு இந்தச் செயலமர்வினை நடத்தினார்.

இதில் பல்வேறு அனர்த்தங்களின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய படிமுறைகள், விளக்கங்கள் தெளிவு படுத்தப்பட்டதோடு செய்முறைப் பயிற்சிகள் மூலமும் விளக்கமளிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .