2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கொள்ளையிட முயற்சித்த மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 18 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சிலாபம் நகரிலுள்ள தனியார் நிறுவனமொன்றில்  கொள்ளையிடுவதற்கு முயற்சித்ததாகக்   கூறப்படும்  மூவரை  நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து  ஒரு ரி - 56 ரக துப்பாக்கி, ஒரு சீனத் தயாரிப்பிலான 9 மி.மி ரக கைத்துப்பாக்கி, ஒரு  வெளிநாட்டுத் தயாரிப்பிலான கைக்குண்டு, ரி - 56 ரக துப்பாக்கிக்கான 20 தோட்டாக்கள் உட்பட இன்னும் பல ஆயுதங்கள், 02 போலி வாகன இலக்கத்தகடுகளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

நிட்டம்புவ, வெல்லம்பிட்டி, இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இச்சந்தேக நபர்களை சிலாபம் பொலிஸ் பிரிவின் தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவினர் கைதுசெய்தனர்.

இச்சந்தேக நபர்கள் பணம் கொள்ளையிட்டமை, ஆயுதம் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக  நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் விடுதலையாகியுள்ளனரென விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்கள் ஏற்கெனவே சிலாபம் நகருக்கு வந்து குறித்த தனியார் நிறுவனத்தை நோட்டமிட்டிருந்ததுடன், அந்நிறுவனத்திலிருந்து வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் முறை, நேரம் ஆகியவற்றையும்   நோட்டமிட்டுச் சென்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிட்டம்புவ நகரில் சொகுசு காரொன்றை  வாடகைக்கு எடுத்த இச்சந்தேக நபர்கள், மாதம்பை நகரில் காரின்; இலக்கத்தகட்டை மாற்றிக்கொண்டு குறிப்பிட்ட நேரம் வரும்வரை மாதம்பை நகரில் காத்திருந்துள்ளனர்.

சந்தேக நபர்களை கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் காருடன் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மாதம்பை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X