2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஆவணங்கள் மோசடி : நீதிமன்ற உதவியாளருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்ற வழக்குகளை நிறைவடைந்துவிட்டதாக போலியான ஆவணங்களை தயாரித்து பணம் சம்பாதித்த நீதிமன்ற ஊழியர் ஒருவரை எதிர்வரும் 1 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மாவட்ட நீதவான் சிவந்த மஞ்சநாயக்க உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டவர், புத்தளம் நீதிமன்றத்தில் 2 ஆம் இலக்க அறையில் பணிபுரியும் உதவி சேவையாளரான, பிங்கிரிய நாகொல்லாகம பிரதேசத்தை சேர்ந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது;

சட்டவிரோத கசிப்புடன் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவருக்கொதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு நீண்ட காலமாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படாமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த நபரை கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து, அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தனக்கு எதிரான வழக்கில் தான் தண்டப்பணத்தை செலுத்திவிட்டதாக கூறி அதற்கான ஆவணங்களை பொலிஸாரிடம் காட்டியுள்ளார்.

இது தொடர்பில் நீதிமன்ற பதிவாளரிடம் கேட்ட போது ஆவணத்தில் காணப்படும் கையெழுத்து போலியானது என்றும் அது தன்னுடையது இல்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் மோசடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் குறித்த உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X