2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஆடை தொழிற்சாலையில் தீ

Kanagaraj   / 2014 ஜூன் 24 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள 'ஸ்மார்ட் சேர்ட்' ஆடை தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை (24) காலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தொழிற்சாலையின் ஆடைகளை சுத்தம் செய்யும் பிரிவில் பயன்படுத்தப்படும் இரசாயன பொருளில் தீ பற்றி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சம்பவத்தையடுத்து குறித்த ஆடை தொழிற்சாலை ஊழியர்களும் அருகில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க கடும் முயற்சி செய்த போதும், பிற்பகல் வரை தீயை அணைக்க முடியவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, தீயை அணைக்க முயற்சித்த  தொழிற்சாலை ஊழியர்கள்  சிலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியதுடன் அருகிலுள்ள வைத்தியசாலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X