2025 மே 09, வெள்ளிக்கிழமை

கௌரவிக்கும் நிகழ்வு

Menaka Mookandi   / 2014 ஜூன் 24 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் கரைத்தீவு முஸ்லீம் வித்தியாலயத்தில் கடந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை  (23) கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டதுடன் அதற்கு துணைபுரிந்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், வண்ணாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர்களான அசனா மரைக்கார், சுல்தான் மரைக்கார் புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் உட்பட பிரதேச பிரமுகர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X