2025 மே 09, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டு விழா

Kanagaraj   / 2014 ஜூன் 28 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி


குருநாகல் ஸ்ரீ ஜோன் கொத்தலாவல வித்தியாலயத்தில் 48 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆசிரியர் ஓய்வு அறைக் கட்டட நிர்மாணப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அதிபர் ஏ, ரூபாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரதம அதிதியா வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகர கலந்து கொண்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடமேல் மாகாணத்தில் 31 ஆசிரியர் ஓய்வறைக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.  இப் பாடசாலையில் ஓய்வறைக் கட்டடம் நிர்மாணிக்கப்படுவது ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதற்காக அல்ல. அடுத்த பாடம் ஆரம்பிக்கப்படும் முன் சரியாக பாடத்திற்கு தயார் நிலையில் செல்வதற்காகும்.

எமது ஜனாதிபதி  கல்வி முறையை மாற்றியமைத்துள்ளார். கலைத்துறையில் 52 விகிதமானவர்கள் தெரிவு செய்யப்படுவதை நாங்கள் அதனை 18 விகிதமாக குறைத்து விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றோம்.

இந்த மாகாணத்தில் 1246 பாடசாலைகள் உள்ளன. 27000 ஆசிரியர்கள் உள்ளார்கள். கொத்தலாவல வித்தியாலயம்  குருநாகல் நகரிலுள்ள சிறந்த பாடசாலை. இந்தப் பாடசாலையின் வளர்ச்சிக்கு  சமன் இந்திரரத்ன பாரியளவிலான சேவைகளைச் செய்துள்ளார்.

அவர் செய்த சேவைகளை நாங்கள் கௌரவத்துடன் மதிக்க வேண்டும். இப்பாடசாலையின் சம்பவம் ஒன்றுக்காக   மாணவி மரணம் எய்தினார். இது ஊடகங்களில் மிகப் பிரபல்யமான செய்தியாகும். இரு ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் சில சில  செயற்பாட்டின் காரணமாக நானும் மன வேதனைப்பட வேண்டி ஏற்ப்பட்டது.

நான் ஆசிரியர்களுக்காகவோ அதிபர்களுக்காகவே  பணியாற்ற வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அதிபரிடம் பிழைகள் இருக்க முடியும். பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையொன்று இருக்கிறது. இல்லையெனில் பாடசாலையின் கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
நான் பாடசாலையின் அதிபர்களுடன் நல்ல சரி கெட்டதுக்குச் சரி சேர்ந்து இருக்கின்றேன். எந்தப் பிரச்சினையையும்  படிப்படியாக சரியாக ஆராய்ந்து  உரிய மதிப்பீட்டின் படிதான் மாணவர்களின் நலன் கருதி செயற்பட்டு வருகின்றேன் என்று முதல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதில் தாவரவியல் மற்றும் பொது விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X