2025 ஜூலை 16, புதன்கிழமை

வாகன விபத்து: சிறுவன் பலி ஐவர் காயம்

Kanagaraj   / 2014 ஜூன் 29 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்திற்கருகில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயதுடைய சிறுவன்; உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயங்களுக்குள்ளாகி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

களனி பிரதேசத்தைச் சேர்ந்த தொன் பிரயன் தேவப்பெரும (வயது 7) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுவனுடன் குடும்பத்தினர் களனியிலிருந்து மடு தேவாலயத்திற்கு யாத்திரைக்காகச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மடு தேவாலயத்திற்கு யாத்திரைக்காகச் சென்று திரும்பிக் கொண்டிருந்த இவர்கள் புத்தளம் பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் வாகனத்தை நிறுத்தி காலை உணவருந்திக் கொண்டிருந்த போது, லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியிக்கு அருகிலிருந்த கைவிடப்பட்ட தொலைபேசிக் கம்பம் மோதியதில் அக்கம்பம் உடைந்து அவ்விடத்தில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது வீழ்ந்துள்ளது. 

இதன் போது சிறுவன் உட்பட மேலும் மூவரும், விபத்திற்குள்ளான லொறியின் சாரதி மற்றும் அதன் நடத்துனருமாக ஆறு பேர் காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்த சிறுவனின் சடலம்; புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்; சம்பவம் தொடர்பான் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X