2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாக். பிரஜைகளுக்கு போலியோ தடுப்பு

Kanagaraj   / 2014 ஜூலை 11 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.ஸட். ஷாஜஹான்


நீர்கொழும்பு நகரில் தற்காலிகமாக தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வைத்திய முகாம் நீர்கொழும்பு தளுபத்தை, கடற்கரைத் தெரு, குடாபாடு ஆகிய பிரதேசங்களில் உள்ள தாய், சேய் நல நிலையங்களில் இன்று (11) நடைபெற்றது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பின் பேரில் நீர்கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அலுவலகத்தின் ஊடாக, இலங்கையில் தங்கியிருந்தபடி தஞ்சம் கோரியுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த  1400ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்கர்கள், நீர்கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங்களிலும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கியிருந்தபடி தஞ்சம் கோரியுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பிரஜைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பூஸாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X