2025 மே 09, வெள்ளிக்கிழமை

புத்தளத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் விஜயம்

Kanagaraj   / 2014 ஜூலை 12 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க புத்தளம் நகருக்கு இன்று சனிக்கிழமை  விஜயமொன்றை மேற்கொண்டார்.

புத்தளம் நகர மத்தியில் இன்று 10 காலை மணியளவில் வந்திறங்கிய எதிர்க்கட்சி தலைவரை, நாடாளுமன்ற  உறுப்பினர்களான பாலித ரங்க பண்டார, ரொஷான் பெரேரா, புத்தளம் தொகுதி ஐ.தே.க. அமைப்பாளரும், வட   மேல் மாகாண சபை  உறுப்பினருமான கிங்ஸ்லி லால், புத்தளம் நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர்  ஏ.ஓ. அலிகான் ஆகியோர் வரவேற்றனர்.

புத்தளம் நகர வியாபார  நிலையங்களுக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர்  ரணில் விக்ரமசிங்க வியாபாரிகளிடமிருந்து ஐ.தே.க. அங்கத்துவங்களையும் பெற்றுக்கொண்டார்.

 இதே வேளை இன்று பிற்பகல் புத்தளம் முஹியத்தீன் ஜும்மா பெரிய பள்ளிக்கும் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்தார். பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முசம்மில், புத்தளம் மாவட்ட ஜம்இயத்துல் உலமா தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆகியோர் பொண்னாடை போர்த்தி  வரேவேற்றனர்.

புத்தளம் பெரிய பள்ளிக்கு 1720. ஆணி மாதம். 04 ஆம் திகதி கண்டி அரசர் ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் வழங்கிய ஊது குழல், வெண் சாமரை போன்றவற்றையும் எதிர்க்கட்சி தலைவர்  ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார்.

புத்தளம் முஸ்லிம்கள் சார்பாக பெரிய பள்ளி தலைவர் புனித அல் குர்ஆன் பிரதியின் சிங்கள மொழி   பெயர்ப்பையும், நினைவு சின்னத்தையும் வழங்கி வைத்தார்.
  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X