2025 மே 09, வெள்ளிக்கிழமை

புத்தளம் சிறுவர் பூங்கா புதுப்பொழிவடைந்துள்ளது

A.P.Mathan   / 2014 ஜூலை 22 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.யூ.எம்.சனூன்
 
புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் வழிகாட்டலின் கீழ் புத்தளம் சிறுவர் பூங்கா, புதுப்பொழிவடைந்துள்ளது.  
 
சங்கத் தமிழ் கண்ட நாநிலங்களை ஒரு சிறு நிலப்பரப்பில் அமைத்து சாதித்து காட்டியுள்ளார் நகர முதல்வர்.
 
கடந்த வருடங்களில் வடமேல் மாகாணத்தில் சிறந்த சிறுவர் பூங்காவாக தெரிவு செய்யப்பட்டு வந்த இந்த சிறுவர் பூங்கா கவிதை படைக்கும் ஆற்றல் கொண்ட நகர பிதா பாயிஸின் சிந்தனையில்  எழிற் கோலம் கொண்டு நிற்கிறது.
 
குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்பதுதான் சங்ககாலம் சொன்ன நாநிலங்கள். ஆனால் புத்தளத்தின் பூங்காவிலே காட்டுக்கு இடம் ஒதுக்க இடம் இல்லாது போனதால் பாலையை நான்காவதாக்கியுள்ளார் பாயிஸ்.
 
இந்த சின்னஞ் சிறு பூங்காவின் ஒரு பகுதியில் செயற்கை மலை எழுந்து நிற்கிறது. கற்பா‌றைகள் சிதறிக் கிடக்கின்றன. ஒற்றையடிப் பாதை இருக்கிது. சிற்றாறு பாய்ந்தோடி களனி நிலம் நோக்கிப் போகிறது. ஒரு புறத்தில் செயற்கைக் கடல் இருக்கிறது, அது செயற்கையாக அலை மோதுகிறது. 
 
அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த சிறுவர் பூங்கா, இவ்வருடமும் வடமேல் மாகாணத்தில் முதலிடம் பிடிக்கும் என்பதே பலரினது எதிர்பார்ப்பாகும்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X