2026 மார்ச் 23, திங்கட்கிழமை

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் தப்பியோட்டம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம் ஹிஜாஸ்

ஆனமடுவ பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் அங்கிருந்து நேற்றிரவு(10) தப்பியோடியுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆனமடுவ கொட்டுக்கச்சேரிய பகுதியில் ஒளிந்திருந்த 27 வயதுடைய சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர் தனக்கு வயிற்று வலி என தெரிவிக்க, சந்தேகநபரை பொலிஸார் ஆனமடுவ பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அதனையடுத்து அங்கிருந்து குறித்த சந்தேக நபர் தப்பியோடியதாக பொலிஸார் மேலும் தெரிவிததனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .