2025 மே 09, வெள்ளிக்கிழமை

திடீர் மரண விசாரணை அதிகாரியின் அலுவலகத்துக்கு பூட்டு

George   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

நாடளாவிய ரீதியல், வைத்தியசாலை கனிஷ்ட சேவை பணியாளர்கள் இன்று ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் சிலாபம் வைத்தியசாலையின் அமைந்துள்ள திடீர் மரண விசாரணை அதிகாரியின் அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டு பூட்டிய போதிலும் அந்தப் பூட்டை உடைத்து, அலுவலகம் திறக்கப்பட்டு, மரண விசாரணை நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை (20) மேற்கொள்ளப்பட்டதாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிரிகுமார விஜேதுங்க தெரிவித்தார்.

இன்று காலை தனது அலுவலகத்திற்கு மரண விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்காக வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிரிகுமார விஜேதுங்க, தனது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார். பின்னர் இது தொடர்பில் சிலாபம் வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி தினேசா ஜயசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியசாலையின் பணியாளர் ஒருவரை அழைத்து திடீர் மரண விசாரணை அதிகாரியின் அலுவலகத்தின் திறப்பு இல்லாவிட்டால் அதன் பூட்டை உடைத்து அலுவலகத்தைத் திறக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் அந்த அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதோடு திடீர் மரண விசாரணை அதிகாரியின் பணிகள் தடங்கலின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் உடனடியாகச் செயற்பட்டமையினால், தனது உறவினரின் மரண விசாரணைகள் தாமதமின்றி இடம்பெற்று சடலம்; சீக்கிரத்திலேயே தமக்கு கிடைக்க வழி கிடைத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X