2025 மே 09, வெள்ளிக்கிழமை

கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் பலி, மற்றுமொருவர் படுகாயம்

George   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

இளைஞர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களினால் தாக்கி  கொலை செய்ததுடன் மற்றுமொரு இளைஞரை படுகாயங்களுக்குள்ளாகிய  சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஐவரை ஞாயிற்றுக்கிழமை(14)  இரவு கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை(13)  வென்னப்புவ சிரிகம்பல கொலணி எனும் பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் படுகாயங்களுக்குள்ளாகியிருந்தார்.

வென்னப்புவ சிரிகம்பல கொலணி பிரதேசத்தில் உள்ள உள் வீதியில் வைத்து 8 பேர் கொண்ட குழுவினர் குறித்த இரு இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இத்தாக்குதலையடுத்து இளைஞர்கள் இருவரும் அருகிலிருந்த வீட்டை நோக்கி ஓடியுள்ள போதும் சந்தேக நபர்கள் அவ்விளைஞர்களைத் துரத்திச் சென்று கூரிய ஆயுதங்களினால் தாக்கியதாக சம்பவத்தை கண்டவர்கள் பொலிஸாரிடம்  கூறியுள்ளனர்.

இத்தாக்குதலின்போது, படுகாயங்களுக்குள்ளான இளைஞர்கள் இருவரும் உடனடியாக லுணுவில கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் அவர்களில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மற்றைய இளைஞர்  மாராவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான இளைஞரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வென்னப்புவ சிரிகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X