2025 மே 09, வெள்ளிக்கிழமை

யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலிகள் அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளத்தில்  காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வடமேல் மாகாணசபை உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன தெரிவித்தார்.

இந்த திட்டத்துக்கென அரசு 80 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் ஆரம்பக்கட்டமாக புத்தளம், ஆனமடு, நவகத்தேகம, கருவலகஸ்வெவ, வண்ணாத்திவில்லு போன்ற பிரதேசங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளன.

இதன் அங்குராப்பண நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை புத்தளம் சிராம்பியடி பிரதேசத்தில் இடம்பெற்றது. சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன,  வடமேல் மாகாணசபை உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன, புத்தளம் பிரதேச சபைத் தலைவர் நிமல் பமுனு ஆராச்சி  உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X