2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடையும் காலணியும்

Gavitha   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம், செம்மாந்தளுவ சிங்கள வித்தியாலய பாடாசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மற்றும் காலணிகள் திங்கட்கிழமை (29) காலை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதாவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சீருடைகளையும் பாதணிகளையும் வழங்கி வைத்தார்.

பாடசாலையில் நிலவும் குறைகளை கேட்டறிந்து கொண்ட நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ், குறைகளுக்கு கூடிய விரைவில் நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் உறுதி அளித்தார்.

புத்தளம் நகரின் மிகவும் வறுமை கோட்டுக்கு கீழுள்ள கிராமமாக இந்த செம்மாந்தளுவ கிராமம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X