2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கேஷனி விவகாரம்: கற்குகைகளை காட்டினார் 'கிறீஸ் காமினி'

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 04 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், கனேவத்தை, அம்பகொலவெவ என்ற இடத்தைச்சேர்ந்த நான்கு வயது 3 மாதங்களேயான பமாரா கேஷனி பண்டாரவை கடத்திச்சென்று மறைத்து வைத்திருந்த கற்குகைகளை, சிறுமியை கடத்தியதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான கிறீஸ் காமினி, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் இன்று காண்பித்துள்ளார்.

சிறுமியை முதலாவதாக அரங்கல வனாந்தரத்திலுள்ள கற்குகை ஒன்றிலும், பின்னர் பூஜகல வனாந்தரத்திலுள்ள கற்குகையொன்றிலும் அதன்பின்னர் கும்புக்கேவெவ பகுதியிலுள்ள அவருடைய வீட்டிலும் வைத்திருந்துள்ளார்.

கற்குகைகளை காண்பித்ததுடன் சிறுமிக்கு தண்ணீர் எடுத்து கொடுத்த இடம் மற்றும் அச்சிறுமிக்கு வழங்கிய உணவுக்கள் தொடர்பில் கிறீஸ் காமினி, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

தன் அண்ணாவுடன் 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 8ஆம் திகதி இரவு தூங்கிகொண்டிருந்த நான்கு வயது 3 மாதங்களேயான தமாரா கேஷானி பண்டார விஜேகோன் என்ற சிறுமி மறுநாள் அதிகாலை கடத்தப்பட்டு 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X