2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் விற்பனை: நால்வர் கைது

Thipaan   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

சிலாபம் வென்னப்புவ பிரதேசத்தில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட நால்வர், சிலாபம் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று(04) கைது செய்யப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ மற்றும் அதனை  அண்மித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ ஹால்தடுவன வடக்குப் பிரதேசத்தில் 26வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 3,030 மில்லி கிராம் ஹெரோயின்  கைப்பற்றப்பட்டுள்ளது.

மற்றைய சந்தேக நபர்கள் மூவரும் வென்னப்புவ உல்ஹிட்டியாவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் ஒருவர் 25 வயதுடைய இளைஞர் எனவும், அவரிடமிருந்து 3510 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், 22 வயதுடைய மற்றொரு இளைஞர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 24 மில்லி கிராம் ஹெரோயினும் கைது செய்யப்பட்ட 41 வயதுடைய மற்றொருவரிடமிருந்து 22 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோய்னும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X