2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

லொறி சாரதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


சிலாபம், பதுளுஓயா பிரதேசத்தில் சனிக்கிழமை(18) இடம்பெற்ற அம்பியூலன்ஸ் வண்டி விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் லொறியின் சாரதிக்கு பிணை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையை ஆட்சேபித்தும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (20) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் உட்பட பலர் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம்-சிலாபம் பிரதான வீதி, பத்துளுஓயா 61 ஆவது மைல் கல் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில்  இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உட்பட இருவர் பலியானதுடன் மேலும் இருவர் காமயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அம்புலன்ஸ் வண்டியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த வைத்தியர் ஒருவரும் வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரும் பலியானதுடன் அதன் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளி ஒருவரை சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு திரும்பி வரும்வழியில் லொறி ஒன்றுடன் அம்புலன்ஸ் வண்டி மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியரும் கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றும் மதுரங்குளி கணமூலையைச் சேர்ந்த சிற்றூழியர் ஒருவருமே  பலியாகியுள்ளனர்.

அம்பியுலன்ஸ் வண்டியின் சாரதி கடும் காயங்களுக்குள்ளான நிலையில் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லொறியின் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அம்பியுலன்ஸ் வண்டியின் சாரதி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவை தவிர இதர அனைத்து  சேவைகளும் இன்று காலை ஸ்தம்பிதமடைந்தன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X