2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பலத்த காற்றால் கட்டடங்கள் சேதம்

Thipaan   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மாலை வீசிய பலத்த காற்றினால் புத்தளம் பஸ் டிப்போ மற்றும் தில்லையடி முஸ்லிம் வித்தியாலயம் உட்பட மேலும் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இக் காற்றினால் புத்தளம் பிரதேசத்தில் 7 வீடுகள் சேதமடைந்துதள்ளதுடன் பல்வேறு இடங்களிலும் மரங்கள் பல முறிந்து வீழ்ந்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இதேவேளை புத்தளம் பஸ் டிப்போவில் ஏற்பட்ட சேதத்தின் போது ஒருவர் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பஸ் டிப்போ பொறுப்பாளர் தெரிவித்தார்.

வீதிகளில் வீழ்ந்து காணப்பட்ட மரங்கள் தற்போது வெட்டி அகற்றப்பட்டுள்ளன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X