2025 மே 09, வெள்ளிக்கிழமை

அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைப்பு

George   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

 
புத்தளம்  மாவட்டத்தில் பணியாற்றும் அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு  மோட்டார்  சைக்கிள்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, புத்தளம் இந்து  கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை(22) இடம்பெற்றது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், நாடுமுழுவதும் உள்ள  வெளிக்கள அரசாங்க உத்தியோகத்தர்கள்  அனைவருக்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கும்  திட்டத்தின் கீழ் இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் சமூக சேவைகள் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியன்கர ஜயரட்ன, தெங்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் விக்டர் அன்டனி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
அத்துடன், புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ், மாகாண சபை உறுப்பினர்களான சிந்தக மாயாதுன்ன, என்.டி.எம். தாஹிர், புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X